அன்பு வலையுலக சொந்தங்களே!!!
கடந்த சில நாட்களாக உங்களில் சிலருடைய பதிவில் என்னுடைய 'ஆஹா அருமையான பதிவு!' கருத்து வெளிவந்திருக்கும்.
இதை தயவு செய்து பிறிதொரு மொக்கை கருத்தாகவோ, பல்க் கமெண்ட் ஆகவோ எண்ண வேண்டாம்.
ஆழ்ந்த தீவிர யோசனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகே இந்த ஆ.அ. கமெண்டைப் போட்டிருக்கிறேன்.
சொந்தங்களே... நாம் ஒரு பதிவைப் போடுகிறோம் என்றால் அது நன்றாக இருக்கிறது என்பதால்தானே போடுகிறோம்.
யாராவது அருமையில்லாத பதிவைப் போடுவார்களா? சிலருக்கு அது அருமையில்லாததாகத் தெரியலாம். ஆனால் அந்தப் படைப்பாளிக்குத்தான் ஒரு படைப்பின் வலியும் சோகமும் தெரியும். அந்த வலியையும் சோகத்தையும் உணர்ந்ததால்தான் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் 'ஆஹா அருமையான பதிவு' என்று கருத்துரையிடுகிறேன்.
அப்படியே ஒரு பதிவு மிகவும் தரமற்றதாக இருந்தாலும், முதலில் பாராட்டிவிட்டு பிறகு குறையைச் சுட்டிக்காட்டுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆகவே தோழர்களே.. இனி கருத்துரையிடும்போது முதலில் வாழ்த்திப் பிறகு குறையைச் சுட்டிக்காட்டுங்கள்.
இது பதிவுலகத்திற்கு மட்டுமல்ல நம் நிஜவாழ்க்கைக்கும் தான்.
என்றும் அன்புடன்
உங்கள்
ரேஷன் ஆபீசர்...
Sunday, April 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ஆஹா ! அருமையான பதிவு!
சதீஷ், சரியாச் சொன்னீங்க.
புரிதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்கள் வாழ்த்தில் ஒரு பிழை.
அருமையான பதிவிற்குப்பிறகு இரண்டு ஆச்சரியக்குறி இருக்க வேண்டும். நீங்கள் ஒன்று தான் போட்டுள்ளீர்கள். பரவாயில்லை.!!
ஆஹா ! அருமையான பதிவு!!
கடக்காரரே.. ஒரு கிலோ பின்னூட்டம் இருந்தா போடுங்கோ..I:-)
neydhal.blogspot.com
நன்றி ஸ்டார்ஜன்!
நன்றி இளையபல்லவன்!!
ஆஹா, அருமையான விளக்கம்!
வாங்க ராஜரத்தினம்.
பின்னூட்டமா??? ஆஹா. இந்தப் பொருளுக்குத்தானே இப்ப ஏகப்பட்ட டிமாண்டு.
ஷங்கி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ரேசன் கடைக்கு அடிக்கடி வருகை தாருங்கள்.ஆபிசர்ன்னாலும் அடிக்கடி வந்து போனால்தான் நல்ல ஆபிசர்ன்னு பேர் கிட்டும்.
ஆஹா !
அருமையான பதிவு!!
(ஆஹா... நீங்க பயங்கரமான ஆளா இருப்பீங்க போல இருக்கே... )
நன்றி ராஜராஜன்,
அடிக்கடி வருகை தருவதுன்றது நம்ம ஜியாகரபிலயே இல்லியே!
அப்பாவி தங்கமணி அவர்களே!
என்னை பயங்கரமான ஆள்னு சொல்லிப்புட்டீங்களே. நீங்கள் நெசமாவே அப்பாவியோ? (இல்லைன்னா அப்படி காட்டிக்கிறீங்களா?)
ஆஹா !
அருமையான பதிவு!!
//நீங்கள் நெசமாவே அப்பாவியோ?//..:)LOL அக்காவை நம்ப ஒருத்தரும் தயாராக இல்லை...:)
வாங்க அஹமது இர்ஷாத்
நன்றி!!
உங்க புதுமைல ஒரு பொருட்பிழை ஏற்பட வாய்ப்பிருக்கு!
வாங்க தக்குடு பாண்டி!
////
//நீங்கள் நெசமாவே அப்பாவியோ?//..:)LOL அக்காவை நம்ப ஒருத்தரும் தயாராக இல்லை...:)
////
இப்போதைக்கு நான் இந்த விளையாட்டுக்கு வரல!!!
அருமையான பதிவு....
பதிவு! அருமை ஆஹா !
Post a Comment